“வக்பு தானம் Vs கோயில் உண்டியல் Vs பாஜக நன்கொடை...” - சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு

20 hours ago 2

மதுரை: “இந்துக் கோயில் உண்டியல்களில் காசு போடுகிறவர்கள் 5 ஆண்டுகள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?” என்று வக்பு திருத்தச் சட்டம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் சார்பில் தெற்குவாசல் மார்க்கெட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு சு.வெங்கடேசன் எம்.பி. பேசியது: “வக்புக்கு தானம் கொடுப்பது, கொடை கொடுப்பது யாரும் கொடுக்கலாம். அது மதத்துக்கு கொடுப்பது அல்ல. இறைவனுக்கு கொடுப்பது. மதம்தான் மனிதனுக்கு வேறு வேறு. இறை நம்பிக்கை என்பது எல்லோருக்கு ஒன்று. அவர்கள் எந்த இறைவனை ஏற்கிறார்களோ, அந்த இறைவனுக்கு நாம் கொடுப்பது.

Read Entire Article