“வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8-ல் மாவட்ட தலைநகரங்களில் விசிக ஆர்ப்பாட்டம்” - திருமாவளவன்

1 week ago 5

திருச்சி: “வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.

Read Entire Article