வக்பு சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் விவாதம் நிறைவு: வாக்கெடுப்பு தொடங்கியது

17 hours ago 2

புதுடெல்லி,

நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்கு படுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத் தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவ காரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பாராளுமன்ற மக்களவையில் நேற்று மதியம் தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங் களுடன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர் களும் , எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து, மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. தற்போது விவாதத்தின் மீது மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளித்து பேசினார். இதையடுத்து தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

மாநிலங்களவையிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு உள்ளது.மாநிலங்களவையில் 98 பா.ஜனதா உறுப்பினர்கள் உள்பட 123 பேர் பா.ஜனதா கூட்டணியில் உள்ளனர். பெரும்பான்மைக்கு 119 போதும். ஏனென்றால் அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆகும்.

Read Entire Article