திருமண விழாவில் ஒன்றாக நடனமாடிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் - வீடியோ வைரல்

3 hours ago 1

சென்னை,

கடந்த 17-ம் தேதி இரவு மும்பையில் நடந்த ஒரு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் ஆகியோர் அவர்களது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பாடகர் ராகுல் வைத்யா, 'கஜ்ரா ரே' என்ற புகழ்பெற்ற பாடலை பாடியிருந்தார். 

அப்போது ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் அந்த பாடலுக்கு நடனமாடினர். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாக, அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் பல நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டு, தங்கள் விவாகரத்து வதந்திகளை தகர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பையில் நடந்த இயக்குனர் அசுதோஷ் கோவாரிகரின் மகன் கோனார்க்கின் திருமணத்திலும் இவர்கள் ஒன்றாக கலந்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article