செங்கம், ஜன.17: செங்கம் அருகே லோடு வேன், பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். திருவண்ணாமலையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு நேற்று மினி லோடு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த விண்ணவனூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது லோடு வேனும், எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பாச்சல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தது செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார்(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மினிவேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
The post லோடு வேன், பைக் நேருக்குநேர் மோதி விபத்து வாலிபர் பலி செங்கம் அருகே appeared first on Dinakaran.