பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

7 hours ago 2

விருதுநகர், ஜன.17: கோட்டையூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார் விருதுநகர் அருகே கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் கடந்த ஜன.4ல் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

நேற்று இரவு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கோட்டையூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மொத்தம் ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

The post பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article