போதையில் தவறி விழுந்தவர் சாவு

6 hours ago 2

சிவகாசி, ஜன.17: சிவகாசி அருகே மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே பெரியவாடியூரை சேர்ந்தவர் உதயகுமார்(40). இவர் சம்பவத்தன்று மது அருந்திய நிலையில் சுக்கிரவார்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதையில் தவறி விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article