
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கதக் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் துருவராஜீ. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவரது வீட்டில் நேற்று காலை லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக இதுகுறித்து தகவல் அறிந்த துருவராஜீ லோக் அயுக்தா சோதனையை நிறுத்தும்படி அரசியல் பிரமுகர்கள், லோக் அயுக்தா உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் செல்போனில் சிலருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த லோக் அயுக்தா அதிகாரிகள், துருவராஜீவை பின்தொடர்ந்து அவர் செல்போனில் பேசுவதை ஒட்டுகேட்டதாக கூறப்படுகிறது. அதாவது கழிவறைக்கு சென்ற துருவராஜீயை லோக் அயுக்தா அதிகாரிகள் ஜன்னல் மற்றும் கதவு வழியாக ஒட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் துருவராஜீயால் நிம்மதியாக கழிவறைக்கு கூட நிம்மதியாக செல்ல முடியவில்லை என்று தவித்து உள்ளார்.
அதேநேரம் கழிவறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் கணக்கில் வராத தங்க நகைகள், ரொக்கம், சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை பார்த்த துருவராஜீ திக்கு முக்காடியதுடன், எங்கேயும் செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.