சிறுமியை கடத்தி ஓடும் ரெயிலில் பலாத்காரம்: வாலிபருக்கு வலைவீச்சு

4 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலம் டோம்பிவிலி அருகே உள்ள மான்பாடா அதிவிலி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் கடந்த மாதம் 30-ந்தேதி கடத்தி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். இந்தநிலையில் அகோலா ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமியை அங்குள்ள ரெயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், சிறுமியை வாலிபர் ரெயிலில் அகோலாவிற்கு கடத்தி சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியை ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன்பின்னர் அகோலாவில் உள்ள தனது வீட்டுக்கு சிறுமியை வாலிபர் அழைத்து சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்காததால் சிறுமியை வாலிபர் அகோலா ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிஓடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அகோலா ரெயில்வே போலீசார் மான்பாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read Entire Article