இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- முப்படை தளபதி எச்சரிக்கை

3 hours ago 2

 புதுடெல்லி,

உலகளாவிய சிந்தனை குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் டெல்லியில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இந்திய முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சீனாவிடம் இருந்து வாங்கி உள்ளது. சீன ராணுவ நிறுவனங்கள் பாகிஸ்தானில் வணிகம் செய்து வருகின்றன. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வெளி சக்திகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளன. இது இந்தியாவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் இடையே கூட்டு சதி இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் 4 நாட்கள் மோதலில் ஈடுபட்ட போது வடக்கு எல்லையில் சீன தரப்பில் எந்த அசாதாரண நடவடிக்கைகளும் இல்லை. அணு ஆயுத அச்சுறுத்தலால் இந்தியா பின்வாங்காது.அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மோதல்கள் நடந்துள்ளன. ஆனால் 2 அணு ஆயுத நாடுகள் நேரடியாக ஒரு மோதலில் ஈடுபட்டது இதுவே முதல் முறை. ஆபரேஷன் சிந்தூர் அந்த வகையில் சற்று தனித்துவமானது. இது துணைக்கண்டத்துக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் படிப்பினையாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article