லைகருக்கு பிறகு...'கிங்டம்' படத்திற்காக மீண்டும் அதை செய்த விஜய் தேவரகொண்டா

1 month ago 8

சென்னை,

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது பான்-இந்தியா அளவில் உருவாகி வரும் படம் 'கிங்டம்'. கவுதம் தின்னனுரி இயக்கி வரும் இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் 'கிங்டம்' தயாரிப்பாளர் நாக வம்சி, 'விஜய் தேவரகொண்டா இப்படத்திற்கு தனது சம்பளமாக அட்வான்ஸ் தொகையை மட்டுமே வாங்கியதாகவும், படம் அதன் பட்ஜெட்டை மீட்டு தியேட்டர்களில் லாபம் ஈட்டியவுடன் அவர் மீதி தொகையை வாங்குவதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

இதன் மூலம், படத்தை பெரிய அளவில் உருவாக்க அதிக பணம் முதலீடு செய்ய முடிந்ததாகவும் கூறினார். 'லைகர்' படத்திலும் விஜய் தேவரகொண்டா இதையே செய்திருந்தார்.

லைகரின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகநாத் முக்கிய படப்பிடிப்பிற்காக பட்ஜெட் திரட்டுவதில் சிரமப்பட்டபோது விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் பெரும் பகுதியைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

Read Entire Article