குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலைய கழிவறைகள் மட்டும் உள்ளதா? - ஐகோர்ட் கேள்வி

2 hours ago 3

சென்னை,

சில குற்றவாளிகள் போலீசாரிடன் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து கால் உடைவதும், சில சமையங்களில் கைது செய்த பின்னர் சில குற்றவாளிகள் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்து கை உடைவதும் சில காலங்களாக நடைபெற்றுவருகிறது.

இதேபோல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபரின் தந்தை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழுக்கி விழும் நிலையில் தமிழக காவல் நிலைய கழிவறைகள் மட்டும் உள்ளதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. கைதானவர்கள் வழுக்கி விழுந்து கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கைதானவர்கள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article