
சென்னை,
அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளுக்கு மக்கள் செல்வதை காண முடிகிறது. சில இடங்களில் மாலையில் மழை பெய்து, வெப்பத்தை சற்று தணிக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் விபரம்;
* ஈரோடு - 104 டிகிரி பாரன்ஹீட்
* பரங்கிப்பேட்டை - 104 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை - 104 டிகிரி பாரன்ஹீட்
* பாளையங்கோட்டை - 103 டிகிரி பாரன்ஹீட்
* திருத்தணி - 102 டிகிரி பாரன்ஹீட்
* தஞ்சாவூர் - 102 டிகிரி பாரன்ஹீட்
* வேலூர் - 102 டிகிரி பாரன்ஹீட்
* கரூர் பரமத்தி - 100 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி - 100 டிகிரி பாரன்ஹீட்
* கடலூர் - 100 டிகிரி பாரன்ஹீட்
* அதிராம்பட்டிணம் - 100 டிகிரி பாரன்ஹீட்
* மீனம்பாக்கம் - 100 டிகிரி பாரன்ஹீட்