புதிய லெக்சஸ் இஎஸ் கார், சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 350இ மற்றும் 550 இ என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. 350இ அதிகபட்சமாக 224.3 எச்பி பவரை வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 685 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். 550 இ ஆல்வீல் டிரைவாக உள்ளது. இது அதிகபட்சமாக 342.6 எச்பி பவரை வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 610 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
இதுபோல், தொடர்ந்து எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வந்த லெக்சஸ் முதல் முறையாக ஹைபிரிட் கார்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் 300எச் மற்றும் 350 எச் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. இஎஸ்300எச்-ல் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 197 எச்பி பவரை வெளிப்படுத்தும். 2.5 லிட்டர் இன்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 201 எச்பி பவரை வெளிப்படுத்தும். இஎஸ் 350எச் வேரியண்டில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது 247 எச்பி திறனை வெளிப்படுத்தும். மேற்கண்ட கார்களின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.
The post லெக்சஸ் இஎஸ் appeared first on Dinakaran.