கண்டமனூர் அருகே சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து

12 hours ago 3

வருசநாடு, மே 3: வருசநாடு பகுதியில் சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது. வருசநாடு பகுதியில் உள்ள தெருக்களில், ஒரு சிலர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். அவை சாலையோரம் குவிந்து வருகிறது. இவை காற்றில் பறந்து சாலைகளில் குப்பைகள் சிதறுகின்றன. மேலும் மழை பெய்தால் கழிவுகள் சாலைக்கு இழுத்து வரப்படுகிறது.

குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே வருசநாட்டின் முக்கிய தெருக்களின் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குப்பை தொட்டிகளை வைத்து முறையாக அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்டமனூர் அருகே சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Read Entire Article