சாத்தூர் ஆர்சி தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தண்ணீர் தொட்டி அகற்ற கோரிக்கை

11 hours ago 4

சாத்தூர், மே 3: சாத்தூரில் பயன்பாடு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சின்டெக்ஸ் டேங்கை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை சரிவர பெய்யாததால் போதியளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். அப்போது வறட்சியில் பொதுமக்களை காப்பாற்றும் விதத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து நகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுத்தனர்.

இதேபோல் ஆர்.சி தெற்கு தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து பொது மக்கள் பயன்படுத்தும் தெருவின் ஒரு பகுதியில் மோட்டார் மற்றும் டேங் அமைத்துள்ளனர். இந்த சின்டெக்ஸ் டேங் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. ஆகவே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டேங்கை அகற்ற நகாராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சாத்தூர் ஆர்சி தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தண்ணீர் தொட்டி அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article