மோசடி வழக்கில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடுவர் என்ற அச்சம் சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளுக்கு வரக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தொகை அல்லது அதற்கு ஈடான சொத்துகளை டெபாசிட் செய்ய நிபந்தனை விதித்து லுக்-அவுட் நோட்டீஸை விசாரணை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுமுறை, தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்ல நேரிடலாம் என்றும், உறவினர்கள் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துச் செல்ல உத்தரவிடலாம் என்றும் தெரிவித்தனர்.