லிதுவேனியாவில் வீட்டின் மீது சரக்கு விமானம் மோதியது.. ஒருவர் உயிரிழப்பு

2 months ago 11

வில்னியஸ்:

ஜெர்மனியின் லீப்சிக் நகரில் இருந்து லிதுவேனியா தலைநகர் வில்னியஸ் நோக்கி டிஎச்எல் சரக்கு விமானம் புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் விமான நிலையத்தை நெருங்கியது. ஆனால் தரையிறங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்து, தரையை நோக்கி பாய்ந்த விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியது. இதனால் வீடு சேதமடைந்தது. விமான பாகங்கள் வீட்டை சுற்றிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வில்னியஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, விமானம் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை. விமான நிலைய பகுதியில் உறைபனியுடன் கூடிய வானிலை நிலவியது. மேகங்கள் சூழ்ந்திருந்தன, மணிக்கு 30 கிமீ வேகத்தில் காற்று வீசியது. 

Read Entire Article