வாஷிங்டன்,
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் நேற்று மாலை 6 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) மிசோரி மாகாணம் நோக்கி புறப்பட்டது. மருத்துவ நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல புறப்பட்ட அந்த விமானத்தில் 6 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்து ஏற்பட்ட பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் கன்கசஸ் மாகாணத்தில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.