ஈ.சி.ஆர். சம்பவம்: 4 பேருக்கு 14-ம் தேதி வரை சிறை

2 hours ago 1

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) காரில் சென்ற பெண்களை, துரத்தி அத்துமீறும் வகையில் இளைஞர்கள் சிலர் நடந்து கொண்டனர். காரில் வந்த இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது என்றும், உடனடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடப்பட்டு வந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் , ஈ.சி.ஆர். சம்பவத்தில் கைதான 4 பேரை 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும் இந்த வழக்கில் மீதமுள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read Entire Article