'ரைசிங் தூத்துக்குடி' தொழில்முனைவோர் முகாம் ஜூலை 13ல் துவக்கம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

5 hours ago 1

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்த இருக்கும் தொடர் திறன் பயிற்சி முகாமின் துவக்க நிகழ்வு ஜூலை 13, 2025 அன்று நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் படித்த இளைஞர்களுக்கு புத்தொழில் உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்கி, மூலமாக புத்தொழில்களை உருவாக்கி, அதன் மூலமாக தங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதும், பட்டதாரிகளை புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் திறன் வாய்ந்தவர்களாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்வானது, தகுதி பெற்ற இளையர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்களுக்காக நடத்தப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் தகுதியான படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவதற்கான ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் திறமையான புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் மூலம் நடைபெறும் இந்த பயிற்சி முகாம், பல்வேறு முக்கியமான பயிற்சி செயல்முறைகளை உள்ளடக்கியது.

சூழல்வளம் சார்ந்த புத்தொழில் உருவாக்கும் திறன்கள், சந்தைப்படுத்தும் வளப் பயிற்சிகள், தொடர்பு திறன்கள் (Communication Skills), டிஜிட்டல் கல்வி (Digital Literacy), விமர்சனச் சிந்தனை (Critical Thinking), ரெஸ்யூமே உருவாக்கம் (Resume Building), பிரச்சிசனைத் தீர்க்கும் திறன் (Problem Solving) போன்ற தலையங்கங்களின் அடிப்படையில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இந்தப் பன்முகத் திட்டத்தின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 500 பேர் தொழில் முனைவோர்களாக பயிற்சி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த திட்டத்தின் துவக்க நிகழ்வு ஜூலை 13 அன்று தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்டெம் பார்க்கில் வைத்து நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article