ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித்.. வீடியோ வெளியீடு

21 hours ago 2

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம், தமிழ்நாட்டில் வெளியான ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Even the game of valour needs precision to practise. Work ethics !!!#AjithKumar #AjithKumarRacing #CircuitDeSpa #EndurancePrep #RacingSpirit pic.twitter.com/efMd1qy26i

— Ajithkumar Racing (@Akracingoffl) April 18, 2025
Read Entire Article