பா.ஜ.க.வுடன் விஜய் சேர மாட்டார் என நம்புகிறேன் - துரை வைகோ பேட்டி

4 hours ago 3

நாகர்கோவில்,

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு முற்றிலும் விரோதமானது. இது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானது. ஆங்கிலம் வேண்டாம் என வடமாநில பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள். ஆனால் இது பற்றி தமிழக பா.ஜ.க.வினர் பேசாதது ஏன்?. தமிழகத்தில் உள்ள கல்விக் கொள்கை மிக சிறந்தது. இந்தி மொழி திட்டத்தினால் பல வட மாநில மொழிகள் அழிந்துள்ளன.

கன்னியாகுமரியில் 27 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறது. இதனால் பொருளாதாரம் அதிகரிக்கும் என கூறுகிறார்கள். ஆனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என ஆராய வேண்டும். மக்களிடம் கருத்து கேட்காமல் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவது மக்கள் விரோத போக்காகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்கு ம.தி.மு.க. எப்போதும் குரல் கொடுக்கும். பா.ஜ.க. மதவாத கட்சி என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article