சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் கடைகளில் பொதுவாக மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறுவதால், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.