நடிகர் ஆசிப் அலி நடிப்பில் 'ரேகா சித்திரம்' திரைப்படம், கடந்த 9-ம் தேதி வெளியானது. 'கிஷ்கிந்தா காண்டம்' படத்துக்கு அடுத்ததாக ஆசிப் அலி நடித்த திரில்லர் படமாக இது அமைந்தது. மம்முட்டி நடித்த 'தி ப்ரீஸ்ட்' படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர் ஆசிப் அலியின் 'ரேகா சித்திரம்' படம் நன்றாக இருப்பதாகக் கூறி, படக்குழுவினரைப் பாராட்டி, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " ரேகா சித்திரம் படத்தின் திரைக்கதை, எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு குறிப்பும் திகைப்படைய வைத்தது. அன்ஸ்வரா சிறப்பாக நடித்தது நேசிப்பதாக இருந்தது. ஆசிப் அலியின் கதைத் தேர்வு குறிப்பிடக் கூடியதாய் இருக்கிறது " என்று கூறியுள்ளார். இப்படத்தை பாராட்டிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 28.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.