மகனை துணை முதல்-அமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை - எடப்பாடி பழனிசாமி

4 hours ago 2

சென்னை,

சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது;

"எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன். கட்சிக்கு உழைத்து, விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அதிமுக.

தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மகனை துணை முதல்-அமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை. மகளிர் உரிமைத் தொகையை திமுக தரவில்லை. நாங்கள் வாதாடி, போராடி பெற்றுத் தந்தோம். ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article