
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகையில் ஓய்வு பெற்ற தாசில்தார் சிக் அனுமன் என்பவரின் மகனுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி உதகை கரியமலை பகுதியை சேர்ந்த சோமு, குன்னூர் எடப்பள்ளி பகுதியை சேர்ந்த குமாரி லதா, மற்றும் சிவராமன் ஆகிய மூன்று பேர் 16 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உதகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், சோமு மற்றும் குமாரி லதா ஆகியோர் பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள சிவராமன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.