
ரெயில்வே பாதுகாப்புப்படை கான்ஸ்டபிள், ரெயில்வே தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் சார்பில் மார்ச் 2ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்வர்களின் வசதிக்காக முக்கிய ரெயில்களில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது.
அதன்படி திருச்சிராப்பள்ளியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 03 முதல் மார்ச் 18 வரை ஒரு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 02 முதல் மார்ச் 18 வரை ஒரு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 03 முதல் மார்ச் 19 வரை ஒரு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டி வழங்கப்படும்.
இந்த ரெயில்கள் உள்ளிட்ட மொத்தம் 10 ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.