ரெயிலில் தூங்க முடியாததால் வெடிகுண்டு மிரட்டல்... இளைஞர் கைது

2 months ago 11

மானாமதுரை,

சென்னை-ராமேசுவரம் சென்ற சேது எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை ரெயில்வே போலீசார் போனில் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்தனர்.

மிரட்டல் விடுத்த தண்டாயுதபாணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்த காரணத்தை கேட்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி இவர் ரெயிலில் ஊருக்கு செல்ல முன் பதிவில்லா டிக்கெட்டை பெற்றுவிட்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் கூட்டமாக இருந்ததால் போலீசாருக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மது போதையில் இருந்த தண்டாயுதபாணியை கைது செய்தனர்.

ரெயிலில் தூங்க முடியாத காரணத்திற்காக ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article