242 வாக்குறுதிகள் நிறைவேற்றம்; பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா

5 hours ago 4

விஜயநகரா,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா விஜயநகரா நகரில் நடந்த சமர்ப்பண சங்கல்ப பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, 2 ஆண்டுகளுக்கு முன், மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தோம். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் 593 வாக்குறுதிகள் இருந்தன. இதுவரை நாங்கள் அவற்றில் 242 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ளவற்றையும் நிறைவேற்றுவோம் என கூறினார். ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் சக்தி யோஜனா திட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கிரஹ ஜோதி, அன்னபாக்யா, கிரக லட்சுமி மற்றும் யுவ நிதி என மொத்தம் 5 திட்டங்களை கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் என கூறினார்.

2013-ம் ஆண்டு, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது. மொத்தம் அளித்த 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். 30 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். இதன் மொத்த எண்ணிக்கை 208 ஆகும். நாங்கள் கூறியவற்றை செய்தோம்.

ஆனால், 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க. அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை. இதுவே பா.ஜ.க.வுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் எப்போதும் பொய்களையே கூறுகின்றனர். அவர்கள் இதுபற்றி எங்களுடன் விவாதிக்க வரட்டும் என்றும் கூறினார்.

Read Entire Article