
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.4.2025) நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் 1,000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, .க.கணபதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.