ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

3 months ago 18

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள், ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக நடந்து வருகிறது. இதேபோல் கோயில் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகள் பணியும் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின், கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் யாத்ரி நிவாஸ் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் தர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article