திருப்பூர்: திருப்பூரில் கூட்டணிக்கு வருத்தம் தெரிவித்து பேசிய அதிமுக நிர்வாகிகளுக்கு பாஜ செயலாளர் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘கூட்டணியை விமர்சிப்பது நல்லதுக்கு இல்லை; தப்பா போய்விடும்’ என கூறியிருக்கிறார். அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது பல இடங்களில் அதிமுக நிர்வாகிகளை வருத்தம் அடைய செய்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாநகர மாவட்டத்திற்குட்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் பேசும்போது, ‘‘அதிமுக-பாஜ கூட்டணி அமைந்தது வருத்தம்’’ என கூறினார். அதிமுக மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் பேசுகையில், ‘‘கடந்த காலத்தில் பாஜ கூட்டணியால் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு ஏற்பட்டது, இப்போது நிர்ப்பந்தத்தால் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது’’ என கண் கலங்கியபடி பேசினார். அதிமுக நிர்வாகிகளின் இந்த கருத்து திருப்பூரில் பாஜ-அதிமுக கூட்டணிக்குள் மோதலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி நேற்று சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது: முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அண்ணா… உங்களுக்குத்தான் இந்த பதிவு. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்ல. பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் பிரச்னை என சொல்றீங்க. குணசேகரன் அண்ணா… நீங்கள் 3 முறை ெஜயித்த வார்டுக்குள் இன்றைக்கு 64 ஓட்டில் தோற்கிறீங்க. பாஜ கட்சி 484 ஓட்டு வாங்குது. இதற்கு என்ன சொல்றீங்க?. அண்ணா நீங்கள் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை. தொடர்ந்து நீங்கள் பாஜ கட்சியை வன்மையாக சமூக வலைத்தளத்தில் கண்டிக்கிறீங்கன்னு நெனக்கிறேன்.
இது நல்லதுக்கு இல்லைங்கண்ணா. 3 முறை நீங்கள் ஜெயித்த இடத்தில் மாமன்ற எலக்ஷனில் தோற்கிறீங்க? என்ன காரணம்?. பாஜ இல்லாததால்தான். 60 வார்டிலும் நீங்கள் எத்தனை ஓட்டில் தோற்றீர்கள்? என்ற ஹிஸ்ட்ரியை எடுங்கள். பத்திரிகைகளுக்கு கொடுங்கள். பாரதிய ஜனதா எத்தனை ஓட்டு பெற்றது?. நீங்கள் எத்தனை ஓட்டில் தோற்றீர்கள்? என்பதை காண்பியுங்கள். தயவு செய்து ெசால்கிறேன். கூட்டணி என்கிறது வேற. அமித்ஷா, நட்டா, அண்ணாமலை, இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் இவர்கள் எல்லாம் முடிவு எடுத்தபிறகு எங்காவது… நீங்களோ, கண்ணப்பன் அண்ணனோ சும்மா இதெல்லாம் பண்ணாதீங்க. தப்பா போய்விடும். இன்றைக்கு பாஜ கூட இருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள் என பாருங்கள். அண்ணா… ஏதோ இருக்குது… ஏதோ இருக்குது என்கிற மாதிரி சொல்லாதீங்கண்ணா. சின்னம்மான்னு கூவத்தூரில் நீங்கதான் சொன்னீங்க. சின்னம்மாதான் எங்களுக்கு ெதய்வம் என்றீர்கள். அப்புறம் கேட்டா எடப்பாடிங்கிறீங்க. இதுதான் உங்கள் கொள்கையா?.
தயவு செய்து ெசால்கிறேன். பாஜ கட்சியை நீங்கள் விமர்சிப்பதை தவிர்த்துவிடுங்கள். வேண்டியதில்லை என நினைக்கிறேன். நீங்கள் நல்லபடி வேலை செய்திருந்தால் உங்கள் வெற்றி நிச்சயமாக இருந்திருக்கும். இந்த 3 ஆயிரத்து சில்லறை ஓட்டு எல்லாம் பெரிசில்லை. உங்கள் சொந்த பூத்தில் நாங்கள் ெசான்னோம். அண்ணா நீங்கள் வந்து நின்று ஓட்டு ேகளுங்கள் என்றோம். நான் எம்எல்ஏ கேண்டிடேட். எப்படி வந்து நான் ஓட்டு கேட்பது? என கேட்டீங்க. அது தவறுண்ணா. உங்கள் தவறை சுட்டிக்காட்டுகிறேன் என நினைக்க வேண்டாம். உங்கள் தவறை உங்களிடம்தான் சொல்ல முடியும். நீங்கள் பாஜ பற்றி சமூக வலைத்தளத்தில் சொல்லும்போது நான் பப்ளிக்கா சொல்வதில் தப்பில்லை’’ என பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ திடீர் நீக்கம்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ செயலாளரான கார்த்தி சமூக வலைதளங்களில் அதிமுகவினரை எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். சில மணி நேரங்களில் அந்த வீடியோவை கார்த்தி நீக்கம் செய்துள்ளார். இருப்பினும் மற்ற பாஜவினரால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
The post கூட்டணிக்கு வருத்தம் தெரிவித்து பேசிய அதிமுக நிர்வாகிகளுக்கு பாஜ செயலாளர் எச்சரிக்கை: ‘விமர்சிப்பது நல்லதுக்கு இல்லை; தப்பா போய்விடும்’ என பகிரங்க மிரட்டல் appeared first on Dinakaran.