ரூ.3 ஆயிரம் கட்டினால் ரூ.4,300 ஆசைவார்த்தை கூறி ரூ.7 லட்சம் மோசடி

3 months ago 17

துமகூரு மாவட்டம், விஜயநகரை சேர்ந்தவர் லட்சுமி பி.பரத்வாஜ். இவரின் டெலிகிராம் அக்கவுன்ட்டுக்கு ‘யூகாயின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி’ என்ற குழுவில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில், ஓட்டல் விளம்பரங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்ததன் மூலம் பயனடைந்ததாக சிலர் செய்திகளை வெளியிட்டுள்ளனர். தானும் ரிவ்யூ கொடுத்து சம்பாதிக்க நினைத்த அவர், மர்மநபர்களை தொடர்பு கொண்டார். அவர்கள், முதலில் பணம் போட்டு பணியை முடித்தால் கமிஷன் வழங்கப்படும் என்றனர்.

ரூ.1,000 பரிமாற்றம் செய்யப்பட்டு, பணியை முடித்த பிறகு ரூ.1,500 திரும்பக் கிடைத்தது. மீண்டும் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்தார். கமிஷன் உட்பட ரூ.4,300 மாற்றப்பட்டது. அதிக பணத்தை மாற்றினால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த அவர் ரூ.7,14,060 பல்வேறு வங்கி கணக்குகளுக்கு படிப்படியாக மாற்றியுள்ளார். இதில் ரூ.5,800 மட்டும் அவரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ரூ.3 ஆயிரம் கட்டினால் ரூ.4,300 ஆசைவார்த்தை கூறி ரூ.7 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article