ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பூமி பூஜை

4 weeks ago 7

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பூஜையிட்டு பணி தொடங்கி வைத்தார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், வெள்ளியூரில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் 2024 – 2025ம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் எம்.பரக்கத்துல்லா கான், மாவட்ட கவுன்சிலர் டி.தென்னவன், ஒன்றிய கவுன்சிலர் டிஎம்எஸ்.வேலு, ஊராட்சி துணை தலைவர் டி.முரளி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் எஸ்.மனோகரன், விமலா குமார், எஸ்.வெங்கடேசன், தசரதன், பி.ஆர்.ரவி, டி.மூர்த்தி, அஜித்குமார், கஜா, யுவராணி, சுரேஷ், சரிதா, ஜெயந்தி, கிரிஜா, ஜெயா, ஏழுமலை, சுரேஷ், புலந்தர், லட்சுமிபதி, மதுசூதனராவ், புருஷோத்தமன், ஜெய்சங்கர், முரளி, பிரபா, கோபால், யுவராஜ், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பூமி பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article