புதுடெல்லி: ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் பாஜ பேரம் பேசியதாக, கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை நோடீஸ் அனுப்பி உள்ளது. டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 16 வேட்பாளர்களை விலைக்கு வாங்க பாஜ தலா ரூ.15 கோடி பேரம் பேசியதாக அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு ஆளுநர் அலுவலகத்தில் பாஜ பொது செயலாளர் விஷ்ணு மிட்டல் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் சக்சேனா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். அவர்கள் நேற்று கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று நோட்டீஸ் வழங்கினர். அதில் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை வழங்க வலியுறுத்தினர்.
The post ரூ.15 கோடி பேரம் கெஜ்ரிவாலுக்கு திடீர் நோட்டீஸ் appeared first on Dinakaran.