சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு தொடர்வண்டித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 வந்தேபாரத் தொடர் வண்டிகளுக்கான பெட்டிகளில் 9 தொடர் வண்டிகளுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
இதற்கு தெற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டிற்கு 20 வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்கத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்தி எந்தெந்த வழித்தடத்தில் வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்கலாம் என்ற திட்டத்தை தெற்கு தொடர்வண்டித் துறை வகுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்ததால் தான் அவை வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என தொடர்வண்டித்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டிற்கான வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டது அநீதியானது: அன்புமணி கண்டனம் appeared first on Dinakaran.