
சென்னை,
இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 25-ந் தேதி வெளியான படம் 'துடரும்'. இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் வர்மா, பினு பப்பு, மேத்யூ தாமஸ், பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக பேமிலி திரில்லர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.