சூரியின் 'மாமன்' பட டிரெய்லர் வெளியானது

3 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படம் வருகிற மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

என்ன பெத்தாரு....மாமன் வர்ரேன் டா...The #Maaman trailer is here—perfect for a full-on family celebration! Don't miss the fun! Link: https://t.co/dJMXEb6DCJDirected by @p_santh A @HeshamAWmusic MusicalProduced by @kumarkarupannan @larkstudios1#MaamanFromMay16pic.twitter.com/k2NS2gIQJN

— Actor Soori (@sooriofficial) May 1, 2025
Read Entire Article