திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்: செவிலியர் தலையில் கல்லை போட்டு கொலை

3 hours ago 2


திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொலை சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article