ரூ.10 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு செங்கம் அடுத்த கண்ணக்குருக்கையில்

2 hours ago 2

செங்கம், மே 15: செங்கம் அடுத்த கண்ணக்குருக்கையில் ரூ.10 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று ஆய்வு செய்தார். செங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கண்ணக்குருக்கை கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக சமத்துவபுரம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணியை தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் மணி, உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிருளாளினி, மரியதேவானந்த், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post ரூ.10 கோடியில் சமத்துவபுரம் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு செங்கம் அடுத்த கண்ணக்குருக்கையில் appeared first on Dinakaran.

Read Entire Article