ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

3 months ago 16

ஜெனீவா : 1. 5 கோடி ரூபாய் கட்டண பாக்கியை செலுத்தாததாக மராட்டிய முதலமைச்சர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை உலக வர்த்தக மையம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தங்கும் இடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்த ஸ்விட்சர்லாந்து நாட்டின் நிறுவனத்திற்கு ரூ.3.75 கோடி கட்டணம் செலுத்தியவர்கள் ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா தொழிற் வளர்ச்சி நிறுவனம் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அலுவலகம், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்டண பாக்கி ரூ.1.58 கோடியை கடந்த 9 மாதங்களுக்கு 18% வட்டியுடன் செலுத்துமாறு அதில் கூறப்பட்டுள்ளது. 4 நாட்கள் தங்க சுமார் 5.5 கோடி ரூபாய் செலவு செய்ததற்கு உத்தவ் தாக்கரே, சிவசேனா, பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் மராட்டிய அரசின் நடவடிக்கை சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளன.

The post ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Read Entire Article