ராய்ப்பூர்: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்

1 day ago 3

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பனார்சி கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு சவுதியா சட்டியில் இருந்து 50 பேரை ஏற்றிகொண்டு மினி லாரி ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது எதிரே வேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இதன்படி 10 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன் மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அதே நேரத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

கரௌரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். மோதலின் தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், பல பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல பயணிகள் சிதைந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டனர், மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் மிகுந்த முயற்சியுடன் அவர்களை மீட்க வேண்டியிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article