ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் விவசாய சாகுபடிக்கான முதல் தர சூழல் நிலவுவதால், விவசாயிகள் பயிர் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதற்கேற்றபடி இந்த பகுதியில் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீரும் உள்ளது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால், ஏற்கனவே குறைந்த அளவே தண்ணீர் இருந்த ஏரிகளில், தொடர் மழையின் காரணமாக தற்போது நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
அதனால் விவசாயிகள் முதல் போக சாகுபடியை தொடர்ந்து, 2ம் போக சாகுபடியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், நெல், கேழ்வரகு, தக்காளி, காய்கறிகள் மற்றும் பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
The post ராயக்கோட்டை பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.