விழுப்புரம்: “ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 2026 தேர்தலுகான முன்னோட்டமாகும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, நிரந்தரமாக திமுகவே வெற்றி பெறும். இண்டியா கூட்டணியின் பலவீனத்தால் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது” என்று தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ள பாஜக அரசை கண்டித்து இன்று (பிப்.8) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசே ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியாகும்.