
சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் 5 படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்கள் அவர்களின் வருமானத்தையே துயரத்துடவன் காத்திருக்கின்றனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் கைது பிரச்சினையில் தலையிட்டு, இலங்கை கடற்படையினரால் கைது சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.