
தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியை சேர்ந்த மதபோதகர் ஜான்ரோஸ் என்பவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற 13 வயது சிறுமியை ஜான்ரோஸ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஜெபக்கூடத்திற்கு சென்ற சிறுமியை மத போதகர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போதகர் ஜான்ரோசை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் குடும்பத்துடன் ஜான்ரோஸ் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து போதகர் ஜான்ரோஐ கைது செய்தனர். மேலும் போதகருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.