ராமேஸ்வரம் பாம்பன் கலங்கரை விளக்கம் 33 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி

3 months ago 11
ராமேஸ்வரம் பாம்பன் கலங்கரை விளக்கம் 33 ஆண்டுகளுக்குப் பின் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுகலான படிகள் உள்ளதால் மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1846 ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம், 100 அடி உயரத்துடன் 106 படிகளைக் கொண்டது. கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் மூடப்பட்ட கலங்கரை விளக்கம், சிறுவர் பூங்கா உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கலங்கரை விளக்கத்தை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read Entire Article