![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36547780-chennai-09.webp)
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்றைய தினம் நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்து இலங்கை அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்த மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் மீனவர்கள் ராமேசுவரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.