'மம்முட்டி, மோகன்லாலை இயக்குவதே எனது லட்சியம்' - 'மெய்யழகன்' பட இயக்குனர்

2 hours ago 1

திருவனந்தபுரம்,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சி பிரேம்குமார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில், மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"மம்முட்டி சார், மோகன்லால் சார் ஆகியோரது படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இருவருடனும் படம் பண்ண வேண்டும் என்பதுதான் எனது லட்சியம், கனவு.

தற்போதுள்ள பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் போன்ற நட்சத்திரங்களையும் எனக்கு பிடிக்கும். விரைவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்" என்றார்.


Read Entire Article